மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் என்கிற பிரவுசரை 1996ல் உருவாக்கியது. அன்று முதல் இணைய பயன்பாட்டாளர்களின் தேடுபொறிகளில் முதல் தேர்வாக இருந்தது இந்த பிரவுசர். ஆனால், அடுத்து வந்த புதிய வரவுகளான கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ், சபாரி, எம்.எஸ்.என், யூசி ப்ரவுசர், ஒபேரா உள்ளிட்ட போட்டியாளர்களுடன் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் திண்டாடியது. அப்போது கணினியை அனைவரும் எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தும் வகையிலும், தேடுபொறிகளில் முதன்மையாகவும் மெல்ல மாறத் துவங்கியது கூகுள். அடுத்த கட்ட வளர்ச்சியாக ஸ்மார்ட் அலைபேசி வரவால் தனது ஆண்டிராய்டு இயங்குதளத்தை அறிமுகம் செய்து மேலும் பிரபலமடைந்தது கூகுள். இதனால் தன் சந்தையை பெருமளவு இழந்தது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். இதனையடுத்து, 2022ம் ஆண்டு ஜூன் மாதம்வரை இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் செயல்படும். அதன் பின்னர் நிரந்தரமாக முடக்கப்படும். இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் சார்ந்த செயலிகள், இணையதளங்கள் 2029ம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.