இந்தியாவின் கிரெட்டா துன்பர்க் என அறியப்படும் மணிப்பூரை சேர்ந்த லிசிபிரியா கங்குஜாம், ஏழை நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்குவதாகக் கூறி உலகெங்கும் நன்கொடை திரட்டினார். அவரின் அமைப்பு இதுவரை சுமார் 75 லட்சம் திரட்டியுள்ளது. ஆனால், லிசிபிரியாவை முன் நிறுத்தி, பின்னால் இருந்து இயக்கும் அவரது தந்தையும், நோபல் சிட்டிசன் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் அதில் முறைகேடுகள் செய்துள்ளன. இலவசமாக வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அவரது தந்தை டாக்டர் கே.கே.சிங் விலைக்கு விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர், முன்பு ரூ. 19 லட்சம் பண மோசடி செய்தவர், காலநிலை பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் வெளிநாடுகளில் வசிப்போரை ஏமாற்றி லட்சக்கணக்கில் வசூல் செய்தவர், ஐ.நா, யுனெஸ்கோ, இந்திய அரசு ஒரு பரிமாற்ற திட்டத்தை நடத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றிவர் என்பது போன்ற பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது.