வெளிநாடுவாழ் ஹிந்துக்களுக்கு குடியுரிமை

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் ஏற்கனவே இங்கு அகதிகளாக வந்து 12 வருடங்களுக்குமேல் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாபில் 13 மாவட்டங்களில் வசிக்கும் ஹிந்து சிறுபான்மையினர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மோடி அரசு விண்ணப்பங்களை வரவேர்றுள்ளது. இந்த மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த, முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக 2019ம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) மத்திய அரசு நிறைவேற்றியிருந்தாலும், இன்னும் அதற்கான முழுமையான விதிகளை வகுக்கவில்லை. இந்த அறிவிப்பு சி.ஏ.ஏவுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை.குடியுரிமைச் சட்டம், 1955 / 57 / 16ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியே மத்திய அரசு இதனை செயல்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.