கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ, மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ‘இந்த இக்கட்டான சூழலில் மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார செயல்பாடுகளை குறைப்பது, தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது, மருத்துவ உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது, மருத்துவ வினியோக கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என, சி.ஐ.ஐ விரும்புகிறது. ஆனால், இதற்கு சற்று காலம் ஆகும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ என சி.ஐ.ஐ கூட்டமைப்பின் தலைவர் உதய் கோட்டக் கூறியுள்ளார்.