நிலத்தை ஆக்கிரமித்து சர்ச்

சென்னையைச் சேர்ந்த, 87 வயதான ஈஸ்வரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாலவாக்கத்தில் 3,800 சதுர மீட்டர் இடத்தை, 1960ல் என் சகோதரர் வாங்கினார்; அவர் இறந்து விட்டார். அவரது சட்டப்பூர்வ வாரிசு நான்; அதற்கான சான்றிதழ் உள்ளது. நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், என் சகோதரரின் ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தலை ரத்து செய்தது. ஆனால், இதற்கிடையில், சட்டவிரோதமாக தனசேகரன் மற்றும் பால் மோசஸ் என்ற கிறிஸ்தவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து ‘சர்ச்’ கட்டினர். புகார் அளித்தும் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி பெறாமல் மேற்கொண்ட கட்டுமானங்களை அகற், அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், திட்ட அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை, நான்கு வாரங்களில் அரசு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.