கேரளாவில் யுவம் மாநாட்டில் உரையாற்றிய பின்னர், மாநிலத்தின் சில முக்கிய கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த 8 தலைவர்கள் கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள் சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் பசேலியோஸ் கிளீமிஸ், சிரிய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் 3ம் பாசேலியோஸ் மார்த்தோமா மேத்யூஸ், ஜேக்கபைட் தேவாலயத்தின் ஜோசப் மோர் கிரிகோரியோஸ். லத்தீன் கத்தோலிக்க திருச்சபையின் காளத்திபரம்பில், க்னானையா திருச்சபையின் மேத்யூ மூலக்காட், க்னானியா யாக்கோபைட் பேராயர் குரியகோஸ் மார் சேவரியோஸ், கல்தேயன் சிரியன் திருச்சபையை சேர்ந்த மார் அவ்கின் குரியாக்கோஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு பிரதமரை சந்தித்தனர். தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் வரும் பகுதிகளில் மீனவர்களுக்கான வீடுகள், பட்டியல் சமூக மதம் மாறியவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து, ரப்பர் விலை மற்றும் மக்களவையில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இருக்கையை மீட்டெடுப்பது ஆகியவை பிரதமருடன் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து விவாதைத்தனர். பிரதமர் அவர்கள் கூறியதை பொறுமையாக கேட்டு, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஒப்புக்கொண்டதாக கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் பின்னர் தெரிவித்தனர். மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவர்களுடனான பா.ஜ.கவின் தொடர்ச்சியான சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு உள்ளது.