நாட்டில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பல மனித உரிமை அமைப்புகள் மற்றும் அறிக்கைகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த நவம்பர் 2021ல், மனித உரிமை ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் 1,000 ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சிறுமிகள் கட்த்தப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு முஸ்லிம்மாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என கூறினர். பாகிஸ்தான் மற்றும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பாகிஸ்தான் அரசு இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது கிறிஸ்தவ சிறுமி கடத்தப்பட்டதைக் கண்டித்து பைசலாபாத் மாவட்ட கவுன்சில் சௌக்கில் ஏராளமான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி பாலியல் பலாத்காரத்திற்காக கடத்தப்பட்டதாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்துள்ளோம், விசாரித்து வருகிறோம் என கூறினாலும், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் அந்த நடவடிக்கைகளில் திருப்தி அடையவில்லை.