கிறிஸ்தவ பள்ளி அராஜகம்

குஜராத் மாநிலம் வாபியில் உள்ள செயின்ட் மேரிஸ் என்ற கிறிஸ்தவப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ண பிரசாத் மற்றும் ஷ்லோக் சௌத்ரி என்ற சிறுவர்கள் கடந்த மார்ச் 11ம் தேதி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி ஒருவரையொருவர் பள்ளியின் தாழ்வாரத்தில் வாழ்த்திக் கொண்டனர். வட மாநிலங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ராம் ராம்’ என கூறிக்கொள்வது மிகவும் சகஜம். சிறுவர்களின் இச்செயலை பார்த்த அப்பள்ளியின் ஆசிரியர் கல்பேஷ் பாகேல், மாணவர்களை தண்டிக்கும் நோக்கில், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க சொன்னார். பள்ளியின் நடவடிக்கையால் மனமுடைந்த பெற்றோர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வாபி பிரிவின் துணைத் தலைவர் நரேந்திர பயக்கை அணுகினர். இதனையடுத்து பஜ்ரங்தள உறுப்பினர்களுடன் வி.ஹெச்.பியினர் இணைந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி, பள்ளி வளாகத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டது. ஆசிரியர் கல்பேஷ் பாகேலும் பெற்றோரிடம் மன்னிப்பு கோரி மன்னிப்பு கடிதம் அளித்தார். சிலர் தங்கள் மத உடையை கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திவரும் நிலையில், ஹிந்துக்களின் பாரம்பரிய முறைப்படி ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொன்ன குழந்தைகளை தண்டித்தது கண்டிக்கத்தக்கது.