அஸ்ஸாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில், கிறிஸ்தவ காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாற மறுத்த பழங்குடி இளைஞரான பிக்கி பிஷாலை செப்டம்பர் 11 அன்று கிறிஸ்தவ மதவெறி கும்பல் கொடூரமாக தாக்கிக் கொன்றது. மதம் மாற மறுத்த அவரை உள்ளூர் சர்ச்சுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 200 பேர் கொண்ட கும்பல் பிக்கியை அடித்துக் கொன்றனர் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மதவெறி கொலை வழக்கில் உள்ளூர் கிறிஸ்தவ பாதிரி இஸ்மாயில் ஷப்பார் என்பவரும் அவரது உதவியாளர் நிரஞ்சன் ஐயன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் அந்த பெண்ணின் தந்தை மற்றும் மாமாவும் அடங்குவர். இதனிடையே, கத்தோலிக்க பள்ளியின் முதல்வர் ஒருவர் உட்பட, உள்ளூர் கிறிஸ்தவ தலைவர்கள் பலர் அங்குள்ள ஒரு சர்ச்சில் ஒரு வெகுஜனக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, கொலையில் ஈடுபட்ட பாதிரியை விடுவிக்குமாறு அரசு நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக மனித உரிமைகள் அமைப்பான சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் புகார் தெரிவித்துள்ளது.