கோவை ரேஸ் கோர்ஸ்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் சி.எஸ்.ஐ நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே ஊழல் குறித்த சர்ச்சையில் மோதல் ஏற்பட்டது. அதில் வழக்கறிஞர் நேசமெர்லின் என்பவர் இரும்புதடியால் தாக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போதகர்கள், சார்லஸ் சாம்ராஜ், வில்சன் குமார் மற்றும், சுதன் அப்பாதுரை உட்பட 15 பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல சி.எஸ்.ஐ. ஆலய செயலாளர் ஜேக்கப் கொடுத்த புகாரின் பேரில் நேசமெர்லின், அமிர்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மோதல் தொடர்பாக கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஆல் சோல்ஸ் ஆலய போதகர் சார்லஸ் சாம்ராஜை கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் திமோத்தி ரவீந்தர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.