மதம் மாற்றும் கிறிஸ்தவ அமைப்பு

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மதர் தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரீஸ் ஆப் சேரிட்டி என்ற தொண்டு நிறுவனம், வதோதராவில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகளை கிறிஸ்தவ மத நூல்களைப் படிக்கவும், அவர்களின் முறைகளை பின்பற்றவும், கிறிஸ்தவ பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் பைபிளை படிக்கவும் கட்டாயப்படுத்தப்படுத்தியது. அங்கு வசிக்கும் ஹிந்துக்களின் மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துவது, வெறுப்புணர்வை விதைப்பது, கழுத்தில் சிலுவையை அணிய வைப்பது, அசைவ உணவை உண்ணவைப்பது போன்ற சட்டவிரோத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. ஹிந்துப் பெண்ணை கிறிஸ்தவ மதச் சடங்குகளின்படி கிறிஸ்தவரை திருமணம் செய்துகொள்ளவும் வற்புறுத்தியது. இதுகுறித்த புகார்கள் அடிப்படையில் அங்கு நேரில் சென்று விசாரித்த மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் மயங்க் திரிவேதி, இது குறித்து விசாரித்து உண்மையை கேட்டறிந்தார். பிரகு அவரின் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பும் மற்ற கிறிஸ்தவ அமைப்புகளை போன்றே இந்த குற்றச்சாட்டை வழக்கம்போல மறுத்துள்ளது.