கோயில் சுவற்றில் கிறிஸ்தவ விளம்பரம்

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே முனியசாமி கோயில் சுற்றுச் சுவற்றில் கலங்கரை விளக்கு ஏ.ஜி கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள் பைபிள் வாசகங்களுடன் விளம்பரம் வரைந்து இருந்தனர். அந்த கிறிஸ்தவ சபையின் 30வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இந்த விளம்பரம் இடம் பெற்றிருந்தது. ஹிந்து கோயிலின் சுவற்றில் பிற மத போதனைகளும் விளம்பரமும் இடம் பெற்றிருந்ததால் இதற்கு அப்பகுதில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சமூக நல்லிணக்கத்துக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டே வரையப்பட்டிருந்த அந்த விளம்பரம் குறித்து இந்து முன்னணியினரின் அளித்த புகாரை அடுத்து அந்த விளம்பரம் அழிக்கப்பட்டது.