பாரதத்தின் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை எங்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதை தடை செய்ய உத்தரவிடுங்கள் என்று ஐ.நாவிடம் சீனா முறையிட்டு உள்ளது. மேலும் சோதனையில் இருப்பதாகக் கூறப்படும் அக்னி 6 ஏவுகணை உலகின் எந்தப் பகுதியையும் தாக்கும் சக்தி படைத்தது என கூறப்படுவதால் அதனை முளையிலேயே கிள்ளியெறிய அக்னி 5ன் சோதனையை தடைசெய்யக் கோருகிறது சீனா. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு சாதாரண தோலைபேசி அழைப்பு மூலம் நம்மை மிரட்டி, வளர்ச்சியை தடுத்து வந்த சீனா, தற்போது அந்த மிரட்டல்கள் எல்லாம் இன்றைய தேசபக்தி மிக்க, வலிமையான மத்திய அரசிடம் எடுபடாததால் ஐ.நாவில் முறையிடுகிறது. வரலாற்றில் முதல் முறையாக சீனாவின் இவ்விதமான முறையீடுகளைப் பார்க்கும் மற்ற உலகநாடுகள் பாரத்த்தை பிரமிப்போடு பார்க்கின்றன.