அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள சாங்லாங் மாவட்டத்தில் நடந்த ராணுவ வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்மாநில ஆளுனர் பி.டி.மிஸ்ரா, ‘நாட்டை பாதுகாக்கும் ஒப்பற்ற தேசப்பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். நானும் ராணுவத்தில் பணியாற்றியவன் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு. ராணுவ வீரர்கள் நலனில் இப்போதுள்ள மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. அக்காலத்தில் பாரதத்திற்கு வலிமை ஆன தலைமை இருந்திருந்தால், 1962ல் சீனாவுக்கு எதிரான போரின் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்து இருக்கும். பாரதம் வெற்றி பெற்று இருக்கும். கண்டிப்பாக தனது பகுதிகளை இழந்து இருக்காது. ஆனால், தற்போது நிலைமைகள் மாறிவிட்டன. வலிமையான ராணுவ பலம் உள்ள நாடுகளில் பாரதமும் ஒன்றாக உள்ளது’ என்று பேசினார்.