பாரத சீன எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில், நமது எல்லையை காக்க வீரதீர செயல் புரிந்த நமது ராணுவ வீரர்களில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அதனை நமது பாரதம் ஒப்புக்கொண்டது, அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தியது. சீன தரப்பில் 43 பேர் இறந்ததாக நமது பாரதம் தெரிவித்தது. ரஷ்ய பத்திரிகையும் சீன வீரர்களின் கல்லறை புகைப்படத்தை வெளியிட்டு அதனை உறுதிபடுத்தியது. ஆனால், சீனாவை ஆளும் கம்யூனிச கட்சி இதனை ஒப்புக்கொள்ளவே இல்லை. பின்னர் 4 பேர் இறந்ததாகக் கூறியது. இந்நிலையில், சமீபத்தில் சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ இறந்த தனது ராணுவ வீரர்களை குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில், ஒரு சீன சிப்பாய் சென் ஹோங்ஜூன், தனது சக வீரர்களை காக்க உயிர் துறந்தார் என்றும், அவருக்கு ‘எல்லையைக் காத்த நாயகன்’ என்ற பட்டத்தை கம்யூனிச கட்சி வழங்கியதையும் குறிப்பிட்டது. இதன் மூலம், சீனா ஐந்தாவதாக ஒரு ராணுவ வீரர் இழப்பை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.