ஊழல் வழக்கில் முதல்வரின் மகள்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் திருத்தப்பட புதிய மதுபான கொள்கையை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஊழல்கள் குறித்து சி.பி.ஐ மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளானர்.மேலும் அவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.2.82 கோடி பணம், 1.80 கிலோ தங்க நகைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.அதன் அடிப்படையில், டெல்லி தொழிலதிபர் அமித் அரோரா கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில் ‘சவுத் குரூப்’ என்கிற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பலருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.இந்த சவுத் குரூப் நிறுவனம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதா உட்பட பல முக்கிய பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இத்ன மூலம், ரூ.100 கோடி மதிப்பிலான ஊழல் பணம் விஜய்நாயர் என்பவர் மூலம் இவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.