சத்ரபதி சிவாஜியின் ஜெயந்தியைத் தொடர்ந்து, ஹிந்துக்களை புண்படுத்தும் விதத்திலும் மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும் ஷேக் அஃப்தாப் என்பவர் தனது முகநூலில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதில், மாவீரனான சிவாஜி, கொடுங்கோலன் ஔவுரங்கசீப்பை வணங்குவது போன்று வரலாற்றில் நிகழாத ஒரு பொய்ய்யான சம்பவத்தை சித்தரித்து பகிர்ந்துள்ளார். அவர் தனது வீடியோவுக்கு ‘ஔரங்கசீப் ஹிந்துஸ்தானத்தின் தந்தை’ என்று தலைப்பிட்டிருந்தார். இது கடந்த மே 14 அன்று நடந்தது. இது ஹிந்துக்களின் கோபத்தை தூண்டியது. ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பலர் அஃப்தாப் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து, மே 15ல் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிர மக்கள், சத்ரபதி சிவாஜியை கடவுளுக்கு ஈடாக மதித்து போற்றுகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப், மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள புசாத் பகுதியில் வசிப்பவர். தன் மீது வழக்குப்பதிவு செய்ததை அறிந்ததும் அஃப்தாப் பயந்து தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க கண்டாலா காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இதனிடையே, அஃப்தாப் மீதான புகாரைத் தொடர்ந்து, ஹிந்துக்கள் தங்கள் மத உணர்வைப் புண்படுத்தியதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தினர் சிலர், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சமூக ஊடகங்களில் சில முஸ்லிம்கள் அஃப்தாப்புக்கும் ஔரங்கசீப்புக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றனர்.