பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய ஏதுவாக, https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற இணையதள இணைப்பு துவங்கப்பட்டுள்ளது. ‘இதன் மூலம் பொதுமக்கள், தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையத்தினையும், நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 044-4612 2300 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33644 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்புகொண்டு தடுப்பூசி மையங்கள், நேரம் போன்றவற்றை முன்பதிவு செய்யலாம். அந்தந்த மையங்களில் ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இணையதளம், தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்யும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள தடுப்பூசிகள் நேரடியாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும்’ என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.