குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) தொடர்பான வன்முறை கலவரங்களைத் தூண்டியது, அதில் நடைபெற்ற பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் கேரளாவில் உள்ள நான்கு அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக மத்திய துணை ராணுவப் படையினர் சென்றனர். மூவாட்டுபுழாவில் உள்ள இந்த அமைப்பின் தலைவர் ஒருவரின் வீட்டில் சோதனையிட சென்றபோது பி.எப்.ஐ அமைப்பினர் அங்கு பிரச்சனை செய்தனர். அவர்கள் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சிலர் சோதனை நடைபெற்ற அலுவலகங்களை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். முன்னதாக, ‘சி.ஏ.ஏ வன்முறை போராட்டம் நடத்த சந்தேகத்திற்கு இடமான நிதி ஆதாரங்கள் மூலம் பி.எப்.ஐ பெரும் நிதியைப் பெற்றது. நாட்டில் வன்முறைக் கலவரங்களை நடத்த ஒரே மாதத்தில் சுமார் 120 கோடி ரூபாய் செலவிட்டது, இந்தத் தொகை பி.எப்.ஐ’யுடன் உடன் தொடர்புடைய 73 பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான ரீஹேப் இந்தியா அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.