விண்வெளி கொள்கையில் மாற்றம்

துபாயில் 6 மாத காலம் நடைபெறும் எக்ஸ்போ 2020ல் பாரதமும் பங்கேற்று உள்ளது. அங்கு நடைபெற்ற ‘விண்வெளி-சர்வதேச பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்புகளின் எதிர்காலம்’ என்ற அமர்வில், ​​விண்வெளித் துறை செயலாளரான சிவன், இணையவழியில் பங்கேற்றார். அப்போது அவர், ‘பாரதம் விண்வெளித் துறையில் அதன் தொழில் சார்ந்த கொள்கைகளை விரைவில் திருத்த உள்ளது. இதில், சமீப காலம்வரை தனியார் துறையின் பங்களிப்பு வெறும் சப்ளையர்களாக மட்டுமே இருந்தது. ஆனால், புதிய சீர்திருத்தங்களால் இனி தனியாரும் விண்வெளித் துறையில் பங்காளிகளாக உருவெடுப்பார்கள். எதிர்காலத்தில் பாரதத்தை சர்வதேச சந்தையில் பொருளாதார மையமாக மாற்றும் நோக்கத்துடன், இந்திய விண்வெளி சங்கம் (ISpA) என்ற புதிய தொழில் அமைப்பை பாரதம் தொடங்கியுள்ளது. எனினும், விண்வெளியைப் பாதுகாப்பானதாக வைப்பது அவசியம் அது, சர்வதேச அரசுகள், அரசு சாரா நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பு’ என கூறினார்.