கர்நாடக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சமீபத்தில் தனது சட்டமன்ற உரையில், தனது தாய் கிறிஸ்தவ மிஷனரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றம், செய்யப்பட்டார். ஹோசதுர்கா பகுதியில் பெரிய அளவிலான மதமாற்றங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் சுமார் 20,000 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மிஷனரிகள், பட்டியல் வகுப்பினர், பழங்குடி சமூகத்தினரை குறிவைக்கின்றனர். இதனை எதிர்ப்பவர்களை கற்பழிப்பு, ஜாதிக் கொடுமை போன்ற பொய் வழக்குகளில் சிக்க வைக்கின்றனர். மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பழைய சலுகைகளைப் பெற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சில நாட்களாக அவர் தாய் மதம் திரும்பும் பிரச்சாரத்தை துவக்கினார். சித்திரதுர்காவின் ஹொசதுர்கா தாலுகாவில் உள்ள ஹாலுரமேஸ்வரா கோயிலில் தாய் மதத்திற்கு திரும்புவதற்கான சடங்குகள் நடத்தப்பட்டன. இம்முயற்சியின் பலனாக தற்போது அவரின் தாயார் உட்பட நான்கு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேர் தங்கள் தாய் மதத்திற்கு திரும்பியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.