5வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்- 3

நிலவு தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் கடந்த 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் ஜூலை 17ம் தேதியன்று 2வது சுற்றுப்பாதைக்கும், 18ம் தேதி 3வது சுற்றுப்பாதைக்கும், 20ம் தேதி 4வது சுற்றுப்பாதைக்கும் உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றது. சந்திரயான்- 3 விண்கலத்தின் 5வது சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சந்திரயான்- 3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பூமியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்ற உந்துவிசை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.