செல்போன் சர்வீஸ் பயிற்சி

சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், அலைபேசி பழுது நீக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 27 முதல் 29ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ. 6 ஆயிரம். இதில் சேர குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18. அலைபேசி பழுது நீக்கத் தொழிலில் ஈடுபட உள்ளவர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டோரும் இப்பயிற்சியை பெறலாம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 98410 99911, 91595 87689, 94440 34246 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.