அசாமில் முதல்முறையாக காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றிய அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பசுமாடு நமக்கு புனிதமான விலங்கு. அதை நாம் அனைத்து வகையிலும் பாதுகாக்க வேண்டும். அசாமில் பசுக் கடத்தல் பல ஆண்டுகளாக நடந்து வரும் 1,000 கோடி ரூபாய் சட்டவிரோத வர்த்தகம். இதில், பல சர்வதேச சக்திகள் ஈடுபட்டுள்ளனர். அசாமில் இருந்து ஏராளமான கால்நடைகள் சட்டவிரோதமாக பங்களாதேஷுக்கு கடத்தப்படுகின்றன. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். இதுவரை நூற்றுக்கணக்கான கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள். இதில் ஈடுபட்ட ஒரு காவல்துறை டி.எஸ்.பியும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பழிப்பு, போதைப்பொருள், ஆயுதங்கள் தொடர்பான வழக்குகளில் கணிசமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் முதல்வர் கூறினார்.