அரசியலையும், பொருளியலையும் சீர்குலைக்கும் இலவசங்கள்

வறுமை தணிந்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிந்து வருகிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள். ஆனால் அதே நேரத்தில் இலவசங்களால் அரசியலும், பொருளியலும் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. இக்கட்டான தருணத்தில் உதாரணமாக கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளும் இலவசங்களை வழங்கின. துரதிருஷ்டவசமாக ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இலவசங்களே அரசியலையும், பொருளியலையும் ஆட்டிப் படைக்கின்றன. இடைவிடாத முயற்சியின் வாயிலாக மட்டுமே வெற்றி இலக்கை எட்ட முடியும். வெறும் விருப்பங்கள் மூலமாக வெற்றி இலக்கை ஒருபோதும் எட்ட முடியாது என்பது அனுபவ ஞானம் சார்ந்த வழிகாட்டு நெறியாகும். உறங்கிக் கொண்டிருக்கின்ற சிங்கத்தின் வாய்க்குள் தானாக இரை போய் சிக்கிக் கொள்வதைப் போல விருப்பப்பட்டே இலவசம் என்ற வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். கலியுகத்தில் இது உக்கிரமடைந்து வருகிறது. மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக இலவச வலை விரிக்கப்படுகிறது. இதில் வாக்காளர்கள் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள்.…

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்

“ஹிந்து அல்லாதோர் பிரவேசிக்கத் தடை” -என்ற வாசகத்தைத் தாங்கிய அறிவிப்புப் பலகைகள் பல கிராம எல்லைகளில் திடீரென முளைத்தன. அந்தச் செய்தி வெளியானதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. உடனடியாகக் களத்திற்குச் சென்று விசாரணை நடத்துமாறு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரைப் பணித்தார் காவல்துறைத் தலைமை இயக்குநர். இந்த இரண்டு பத்திகளையும் படித்த பிறகு உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கலாம். இவ்வளவு நடந்தும் நமக்குத் தெரியாமல் போனதே என்று. அவசரம் வேண்டாம். இதெல்லாம் நடந்தது தமிழகத்தில் அல்ல. ஒரு வட மாநிலத்தில். ஹிமயத்தைக் கிரீடமாக அணிந்த மாநிலம், மலைகளும், மலைப் பிரதேச வனங்களும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். இந்த மாநிலத்திற்குள் அடி எடுத்து வைக்காமல் ஹிந்துக்களின் தீர்த்த யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. ஆண்டு முழுவதும் யாத்ரீகர்கள் இங்கே வந்த வண்ணம் இருப்பர். ஆம், கேதார்நாத் பத்ரிநாத் உள்ளிட்ட புண்ய ஸ்தலங்கள் பலவற்றின் இருப்பிடம் இது. புண்ய நதிகளான கங்கை,…