மக்களவையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘நாடு முழுவதும் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான விவரங்களை சேகரிக்கக் கோரியுள்ளன. எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் இடம் ஒதுக்க வேண்டும் என்று பாரதத்தின் அரசியல் சாசனப் பிரிவு கூறுகிறது. இந்த பிரிவுகள் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மட்டுமே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். வேறு எந்த பிரிவினரையும் ஜாதிவாரியாக கணக்கெடுக்கப்போவதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.