பி.எப்.ஐ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு

பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல், ஆயுதப் பயிற்சி அளித்தல், வெளிநாட்டு நிதியுதவி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 40 இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது 4 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனையில் பாஸ்போர்ட், வங்கி புத்தகங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பணம், ஆயுதங்கள் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் தற்போது, மத்திய அரசுக்கு எதிராக போரை நடத்த சதி, சட்டவிரோத கூட்டத்தை உருவாக்கி மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்த்தல், பாரதத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தொடர்பாக நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உட்பட 26 பேர் மீது என்.ஐ.ஏவின் ஹைதராபாத் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.