நெல்லையில், முன்விரோதம் காரணமாக முத்துகண்ணன் என்பவரை காரில் கடத்திச் சென்று தாக்கி, வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிய சம்பவத்தை தொடர்ந்து வி.வி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன், வக்கீல் மகாராஜன், சுடலைகண்ணு, ராஜன் ஆகிய 4 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வி.வி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கும் அவரது தம்பி ஜெகதீசன் இடையேயான தொழில் போட்டி, சொத்துத் தகராறு காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.