பயங்கரவாத தொடர்புகளைக் கொண்ட துருக்கியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ஐ.எச்.எச், தீவிர இஸ்லாமிய அமைப்பான பி.எப்.ஐ உடன் கொண்டுள்ள தொடர்புகளை, தன்னுடைய நவம்பர் 16, 2020 கட்டுரையில் அம்பலப்படுத்தியது ஆர்கனைசர் வார இதழ். இதற்காக இந்த அமைப்பு ஆர்கனைசருக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், ‘ஆறு நகரங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக துருக்கிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு, சிரிய எல்லையில் உள்ள ஐ.எச்.எச் அலுவலகங்களை சோதனை செய்தது. ஐ.எஸ்.ஐ.எஸ், ஹமாஸ், அல்குவைதா உள்ளிட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுடனான இவர்களின் தொடர்பு காரணமாக, இஸ்ரேல், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளால் ஐ.எச்.எச்சை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அமெரிக்காவும் இவ்வமைப்பை கண்காணிக்கிறது’ போன்ற பல தகவல்களை ‘நோர்டிக் மானிட்டர்’வெளியிட்டிருந்தது. அவையே இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டன. அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டே வெளியிடப்பட்டது’ என்று ஆர்கனைசர் பத்திரிகை தெரிவித்துள்ளது.