மதமாற்ற முயற்சி கணவன் வழக்கு

சண்டிகரில் 2008ல் ஒரு நகைக் கடையில் மேலாளராக வேலை பார்த்த சீக்கியர் ஒருவர் அந்த கடையில் பணிபுரிந்த முஸ்லிம் பெண்ணுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்தார். அப்போது அந்த பெண், உங்களின் மத நம்பிக்கையில் ஒரு போதும் குறுக்கிடமாட்டேன் என உறுதியளித்தார். ஆனால், திருமணமான நாளில் இருந்தே மனைவியும் அவரது பெற்றோரும் அந்த சீக்கியரை முஸ்லிமாக மதம் மாற கட்டாயப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு 2012ல் ஒரு மகன் பிறந்தான். அவனை சீக்கிய முறைப்படி வளர்க்க விரும்பினார் அந்த சீக்கியர். ஆனால், அவனையும் மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் தனக்கும் தன் மனைவிக்கும் தினமும் தகராறு ஏற்படுகிறது. மதம் மாற மறுப்பதால் தன்னை மாமனார் மாமியார் அவமானப்படுத்துகின்றனர். எனவே, என்னையும் என் குழந்தையையும் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் எனது மனைவி மாமனார் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீக்கியர் ஒருவர் சண்டிகர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக மனுதாரரின் மனைவி மாமனார் மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.