பாரத அரசுக்கு எதிராகப் போரை நடத்தும் நோக்கத்துடனும் தடைசெய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்டு) பயங்கரவாத அமைப்பை வலுப்படுத்தி பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தவும் கடந்த 2016ம் ஆண்டு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டலக் குழுக் கூட்டத்தை நடத்தியது, பயங்கரவாதம் நிகழ்த்த ஆட்களை திரட்டுதல், ஆயுதங்களை சேகரித்தல், ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட சதி தொடர்பான மாவோயிஸ்ட்டு பயங்கரவாதிகள் வழக்கு மலப்புரத்தில் உள்ள எடக்கரா காவல் நிலையத்தில் செப்டம்பர் 30, 2017ல் பதிவு செய்யப்பட்டது, பின்னர் அவ்வழக்கு கேரள பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரிக்கப்பட்டது. பிறகு அவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தற்போது, இவ்வழக்கில், சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அமைப்பை சேர்ந்த 20 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என ஏ.என்.ஐ செய்திவெளியிட்டுள்ளது.