உத்தர பிரதேசம் காஜியாபாத்தில், ‘அப்துல் சமத் சைஃபி என்பவர், ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிடாததால் அவரை பர்வேஷ் குர்ஜார், ஆரிஃப், ஆதில், முஷாஹித் ஆகியோர் தாக்கினர்’ என போலி செய்திகளை பரப்பப்பட்டது. விசாரனையில் அது, தனிப்பட்ட மோதல் என்பதும், அங்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷம் குறித்த சர்ச்சை நடைபெறவில்லை என்பதும் தெளிவானது. மேலும் இது குறித்த 2வது வீடியோ சமாஜ்வாடி கட்சித் தலைவர் உமேத் இத்ரிஸ் வீட்டில் படமாக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது. இதனால் திட்டமிட்டே போலி செய்திகளை வெளியிட்ட டுவிட்டர், தி வயர் செய்தி நிறுவனம் மற்றும் முஹம்மது ஜுபைர், ராணா அயூப், சபா நக்வி, காங்கிரஸ் தலைவர்கள் மஸ்கூர் உஸ்மானி, ஷாமா முகமது மற்றும் சல்மான் நிஜாமி ஆகியோருக்கு எதிராக உத்தரபிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.