800 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேசம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகையையடுத்து அங்கு முஸ்லிம்கள் நிகழ்த்திய கொடூர வன்முறை சம்பவம் தொடர்பாக, உத்தரப் பிரதேச காவல்துறை 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது, வன்முறையில் ஈடுபட்ட 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், சந்தேகத்திற்குரிய தலைவன் உட்பட 24 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் மதகுரு தௌகிர் ராசா ஜூன் 10ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், கான்பூர் வன்முறையைத் தொடர்ந்து பரேலி நிர்வாகம் 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவை பரேலியில் விதித்துள்ளது. இந்நிலையில், ‘இக்கலவரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) போன்ற குழுக்களின் பங்கு குறித்து ஆராயப்பட்டு வருகிறது. வெளிநாட்டு நிதியுதவி குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்ட எவரும் விடுவிக்கப்பட மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்’ என்று கான்பூர் காவல்துறை ஆணையர் வி எஸ் மீனா தெரிவித்துள்ளார். ‘வன்முறையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அல்லது இடித்துத் தள்ளப்படும்’ என்று சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.