இந்திய ராணுவத்திற்கு 4,960 பீரங்கி, கவச வாகன எதிர்ப்பு வழிகாட்டி மூன்றாம் தலைமுறை மிலன் 2 டி ஏவுகணைகளை தயாரித்து வழங்க, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளின் விலை ரூ .1,188 கோடி. இது பாரத அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியை மேலும் ஊக்குவிக்கும். இந்த ஏவுகணைகள் தரையில் இருந்தும், வாகனத்தில் இருந்தும் செலுத்தலாம். இவை மூன்று ஆண்டுகளுக்குள் படிப்படியாக இராணுவத்தில் சேர்க்கப்படும்.