ஜம்மு காஷ்மீரின், ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பா.ஜ.க ஆட்சி வருவதற்கு முன், தேசிய வங்கிகளில் பலருக்கு கோடிக் கணக்கில் கடன் வழங்கப்பட்டது. அவர்களில் சிலர் பணத்தை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். அவர்கள் மீதான வழக்குகளை விரைவுபடுத்தி பணத்தை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்கள் பாரதம் கொண்டு வரப்படுவார்கள். கடனை திருப்பி செலுத்தாமல் தப்பித்தவர்களின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய அப்படியே விட்டுவிட மாட்டோம். அவர்களை பிடித்து பணத்தை பறிமுதல் செய்வோம்’ என தெரிவித்தார்.