கனடாவில் தேவை சி.ஏ.ஏ சட்டம்

கனடாவில் வசிக்கும் சீக்கியர்களின் அமைப்புகளான தி மன்மீத் சிங் புல்லர் அறக்கட்டளை, கல்சா எய்ட் கனடா, கனடாவின் உலக சீக்கிய அமைப்பு (WSO) ஆகியவை இணைந்து சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டன. அதில், ‘ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள்  தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள் அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் சீக்கியர் மற்றும் ஹிந்துக்கள். அவர்களை காக்க கனடா அரசு தன்னால் முடிந்த முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுவார்கள். எனவே, பாரதத்தின் சி.ஏ.ஏ போன்ற ஒரு சிறப்புத் சட்டதிட்டத்தை உருவாக்க கனடா முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.