வணிகவரி துறையை சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்யும் பொருட்டு கடந்த 1-ந்தேதி முதல் சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள வணிக வரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் பிரிவு செயல்படுகிறது. பொது மக்கள் மற்றும் வணிகர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, 044-28514250 என்ற தொலைபேசி எண் மற்றும் ctdpetition@ctd.tn.gov.in என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியில் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என வணிகவரித் துறை தெரிவித்துள்ளது.