மத்திய அரசு சில காலம் முன்னர் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சர்வதேச எல்லையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக சுமார் 14,000 பங்கர்களை கட்ட உத்தரவு பிறப்பித்தது, பின்னர் கூடுதலாக 4,000 பங்கர்களை கட்டவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தற்போது சம்பாவில் 1,592, ஜம்முவில் 1,228, கத்துவாவில் 1,521, ரஜோவ்ரியில் 2,656, பூஞ்ச் பகுதியில் 926 என மொத்தமாக 7,923 பங்கர்களை கட்டி முடித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாக செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். மீதமுள்ள சுமார் 9,905 பங்கர்களின் கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் படிப்படியாக அவை நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.