சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது அறிக்கையில் பா.ஜ.க, தாமரைக்கு பதிலாக புல்டோசரை தனது கட்சியின் சின்னமாக்கலாம் என்று கூறியிருந்தார். ஏனெனில், உத்தரபிரதேசத்தில் உள்ள மாஃபியாக்கள், தாதாக்கள், அரசியல்வாதிகளால் ஏழைகளின் வசிப்பிடங்கள், அரசு சொத்துகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர். அவர்களின் ஆக்கிரமிப்புகளை யோகி ஆதித்திய நாத் தலைமையிலான அம்மாநில அரசு புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தள்ளியது. இதனால், பல தாதாக்கள் பயந்து சட்டவிரோத சொத்துகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தனர். சிலர் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். இதனை குறிப்பிட்டு அகிலேஷுக்கு பதில் அளித்த யோகி ஆதித்தியநாத், ‘இதற்கு ஒரே ஒரு சிகிச்சை மட்டுமே உள்ளது. அது புல்டோசர். சில நேரங்களில் அதிக பஞ்சாயத்துகளை செய்யாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.