மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் பட்ஜெட் 2022 பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்கள் பலரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 24 சதவீத மக்கள் பட்ஜெட் அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 42 சதவீதம் பேர் எதிர்பார்த்ததை விட அதிகமாக பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாக பதிலளித்துள்ளனர். கார்ப்பரேட் கூடுதல் கட்டணங்களில் விலக்கு, உள்கட்டமைப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு, என பல அறிவிப்புகளால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்டகால நோக்கில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு துறை வசதி, வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்த சர்வேயானது இந்தியாவின் 342 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 40,000 பேர் பதிலளித்துள்ளனர்.