பாரதம் திரும்பிய புத்தர் சிலை

பாரதத்தில் இருந்து 1960களில் திருடப்பட்ட பழமையான வெண்கலத்தால் செய்யப்பட்ட நாளந்தா புத்தர் சிலை, அமெரிக்காவில் இருந்து பாரதம் திரும்பியது. 2018ல் லண்டனில் இருந்து ஒரு புத்தர் சிலை மீட்கப்பட்டு பாரதத்திற்கு திருப்பி கொண்டுவரப்பட்டது. தற்போது வந்துள்ளது 2வது புத்தர் சிலையாகும். இந்த புத்தர் ஷக்யமுனியின் சிற்பம் அல்லது போதிசத்வா மைத்ரேயா என்று அழைக்கப்படுகிறது. 1961ல், நாளந்தா அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது. 14 வெண்கல சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முன்னதாக, போதுமான ஆதாரம் இல்லாததால், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மியூசியம், லண்டனில் இந்த சிலையை தர மறுத்தது. இந்தியா பிரைட் ப்ராஜெக்ட் அமைப்பை சேர்ந்த எஸ். விஜயகுமார், சஞ்சீவ் சன்யால், டாக்டர். சசீந்திர எஸ். பிஸ்வாஸ் ஆகியோர் பாடுபட்டு பழைய ஆவணங்களை சேகரித்து அந்த சிலை திருடுபோனதை நிரூபித்து சிலையை மீட்க உதவினர். இவர்களுக்கு மத்திய அரசின் தொல்பொருள் துறை, பாதுகாப்பு அமைப்புகள் தேவையான உதவிகள் அளித்தன.