கர்நாடக சட்ட மேலவையின் 25 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 11 இடங்களில் வெற்றி பெற்று மேலவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதற்கு முன் 14 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் இம்முறை 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 75 உறுப்பினர்களை உடைய கர்நாடக மேல் சபையில் இதுவரை 32 உறுப்பினர்கள் மட்டுமே பா.ஜ.கவுக்கு இருந்து வந்தனர். இதனால், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் இணைந்து பா.ஜ.க அரசு கொண்டுவரும் அனைத்து தீர்மானங்களையும் தோற்கடித்து வந்தனர். இதனால், அரசு கொண்டு வரும் பல நல்ல திட்டங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த பெரும்பான்மையால் கர்நாடகாவில் நல்ல திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ர்க்கும் மதமாற்றத் தடை சட்டம் கர்நாடக மேல்சபையில் விரைவில் நிறைவேறும்.