பிரிவினை சக்திகள் முறியடிப்பு

திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 334 இடங்களில் பா.ஜ.க 329 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 112 இடங்களில் போட்டியின்றி பா.ஜ.க வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரிபுராவில் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷனின் 51 வார்டுகளையும் பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் 3 இடங்களிலும், திருணமூல் காங்கிரஸ் 1 இடத்திலும், ஏ.ஐ.டி.எம்.சி கட்சி ஒரு இடதிலும், சுயேச்சை 1 இடதிலும் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி, “திரிபுரா மக்கள் நல்லாட்சி தரும் அரசையே விரும்புவதாக ஒரு தெளிவான செய்தியை இதன் மூலம் வழங்கியுள்ளனர். உறுதியான அவர்களின் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். “இது தேசியவாத சக்திகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி. திரிபுராவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய, பிரித்தாளும் சக்திகளும், வன்முறை அரசியலைச் செய்தவர்களும் மாநில மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளனர்” என்று பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா கூறினார். அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ், “பிரதமர் நரேந்திர மோடி’யின் தலைமைக்கு அபரிமிதமான நம்பிக்கையைக் காட்டியதற்காக அனைத்து மாநில மக்களுக்கும் மிக்க நன்றி, அவரது வழிகாட்டுதலின் கீழ் 37 லட்சம் மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.