2021 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பெருங்கடல் குறித்த ஆட் ஹாவ்க் கமிட்டியில் பேசிய ஐ.நா சபைக்கான பாரதத்தின் நிரந்தரத் திட்ட ஆலோசகர் ஏ. அமர்நாத், ‘நாங்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரும்புகிறோம். இதனால் நீலப் பொருளாதாரம் எனப்படும் கடல் சார்ந்த பொருளாதாரம் உலக அளவில் விரிவடையும். கொரோனாவுக்கு பிந்தைய உலகம், அத்தகைய ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதற்கு அவசியமாகிறது. இன்று, இந்தியப் பெருங்கடல் உலகின் கொள்கலன் ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேலாக கையாள்கிறது, மொத்த சரக்கு போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு, எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கை கையாள்கிறது. எனவே, இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலமாக இருப்பதை அனைவரும் உறுதிசெய்வது அவசியம்’ என தெரிவித்தார்.