தொகுதி வரையறை

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய சட்டமன்றம் உருவாக்கும் பணியில் உள்ள தொகுதிகள் மறு சீரமைப்புக்கான டீலிமிட்டேஷன் கமிஷன், ஏழு புதிய சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதில் 6 ஜம்முவிலும் 1 தொகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் வர உள்ளன. முதன் முதலாக ரிசர்வ் தொகுதி அடிப்படையில், 9 பட்டியலினத்தவர் தொகுதிகளும் 7 பழங்குடியினத் தொகுதிகளும் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 107 தொகுதிகளில் இருந்து 114 ஆக உயர்த்தப்படும். லடாக்குக்கு உரிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கு, எதிர்கட்சித் தலைவர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, சஜ்ஜத் லோனே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாரபட்சமானது, காஷ்மீர் மக்களின் உரிமை பறிபோகிறது என்றும் ஒப்பாரி வைத்துள்ளனர்.