கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சலதஹள்ளி கிராமத்தில் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரான 19 வயது பட்டியலின ஹிந்து இளைஞரான பசவராஜ் மடிவலபா பாடிகர், தாவல்பி பந்தகிசாப் தம்பாத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்தார். இதனை பிடிக்காத அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் அந்த இளைஞரின் தாயின் கண் முன்பாகவே கயிற்றால் கட்டி குத்திக் கொலை செய்தனர். இது ஒரு கௌரவக் கொலை என காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணின் தந்தை, சகோதரர், இரண்டு உறவினர்களையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.