தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.கவின் சிறுபான்மையினத் தலைவர் முகமது அன்வர், வெயில் காலத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக மசூதிக்கு பல குளிரூட்டிகளை வழங்கினார். ஆனால், அவர் பா.ஜ.கவில் உள்ளார் என்ற காரணத்திற்காக ஆத்திரமடைந்த அங்குள்ள முஸ்லிம்கள், அவர் கொடுத்த குளிரூட்டிகளை எடுத்து மசூதிக்கு வெளியே வீசினர். அந்த கும்பல் அதோடு நிற்காமல், வெளியே எறிந்த அனைத்து குளிர்சாதனப் பொருட்களையும் சேகரித்து கொண்டு சென்று அவரது வீட்டின் முன் வீசினர். பா.ஜ.கவை ஆதரிப்பதற்காக முஸ்லிம் சமூகத்தினர் அதே சமூகத்தினர் மீது கோபத்தை வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல.