அசாம் முழுவதும் உள்ள 977 நகராட்சி வார்டுகளுக்கு மார்ச் 6ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க அமோக வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. அங்கு ஆளும் கட்சியான பா.ஜ.க ஏற்கனவே 60 வார்டுகளில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. கவுஹாத்தியில் மூன்று பெரிய நகராட்சி வாரியங்களில் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. அங்கு பா.ஜ.க 833 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சியான ஏ.ஜி.பி 92 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வார்டுகளை பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.