பா.ஜ.க தனித்துப் போட்டி

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது. இந்த முடிவை தேசியத் தலைமையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அ.தி.மு.க உடனான கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியாகத் தொடரும். அடுத்த 20 நாட்கள் கடினமாக உழைத்து இல்லம் தோறும் தாமரை மலரச் செய்ய வேண்டும். நகர்ப்புற தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவதே பா.ஜ.கவின் நிலைப்பாடு. பா.ஜ.க அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும். எங்களின் பொது எதிரி திமுகவின் 8 மாத ஆட்சியை மையப்படுத்தியே பிரசாரம் இருக்கும். திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்யாத திட்டங்களை வீடுவீடாக எடுத்துசெல்ல இருக்கிறோம்’ என தெரிவித்தார்.