ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜ.க. போலீஸில் புகார்!

பா.ஜ.க.வினர் உயிருடன் இருக்க முடியாது என்று பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளரும், ஆபாச பேச்சாளருமான ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜ.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி. இவர் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் இவரை பலரும் ரோடு சைடு பாரதி என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதேபோல, இவர் தமிழ்நாட்டு மீடியாக்களை ரெட் லைட் மீடியாக்கள் என்று கூறியதால், இவரை ரெட் லைட் பாரதி என்றும் அழைப்பதுண்டு. இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பேசிய ரெட் லைட் பாரதி, தமிழக கவர்னர் உருப்படியாக வீடு போய் சேர முடியாது என்று கூறினார். இதுகுறித்து கவர்னர் அலுவலக தரப்பிலும், பா.ஜ.க. தரப்பிலும் போலீஸில் புகார் செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய ரெட் லைட் பாரதி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீது கைவைத்தால், பா.ஜ.க.வினர் யாரும் உயிருடன் இருக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்து பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தபோதிலும், அவர் மீது கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழக போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பா.ஜ.க. வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் மணி, ரெட் லைட் பாரதி மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதற்காவது நடவடிக்கை இருக்குமா பார்ப்போம்…